பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. இந்திய ராணுவம் அறிவிப்பு!

பிப்ரவரி 6ஆம் தேதியன்று அருணாசலப் பிரதேச மாநிலம் காமெங் பகுதியில் உள்ள உயரமான பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்கள் ஏழு பேரும் உயிரிழந்துவிட்டதாக இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிச்சரிவு
ஏற்பட்ட இடத்தில் இருந்து ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக
இந்திய ராணுவம்
தெரிவித்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில், “தேசப் பணியில் ராணுவ வீரர்கள் உயிர் நீத்துள்ளனர். அவர்களின் சுயநலமில்லா தியாகம் என்றும் நினைவில் இருக்கும். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்கள் வருத்தமளிக்கிறது. அவர்களின் சேவையை நம்மால் என்றும் மறக்க முடியாது. அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.