விவாகரத்து: இந்த முறையாவது ரஜினிக்கு வெற்றி கிடைக்குமா?

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி இரவு சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களை சேர்த்து வைக்கத் தான் ரஜினி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

முதலில் முடியாது என்று சொன்ன ஐஸ்வர்யா தன் அப்பாவின் கோபத்தை பார்த்து பயந்து தற்போது வழிக்கு வந்துவிட்டாராம். ஆனால்
தனுஷ்
தான் தற்போது பிரச்சனையாம்.

ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்த வரைக்கும் போதும், இனியும் என்னால் முடியாது என்று அடம்பிடிக்கிறாராம் தனுஷ். என் மகன்கள் யாத்ரா, லிங்கா மீது பாசம் இல்லாமல் இல்லை. ஆனால் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்கிறாராம்.

இருப்பினும் எப்படியாவது அவர் மனதை மாற்ற வேண்டும் என்று இரு குடும்பத்தாரும் முயற்சி செய்து வருகிறார்களாம்.

முன்னதாக தனுஷின் அண்ணன் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் விவாகரத்து செய்ய முடிவு செய்தபோது ரஜினி அதில் தலையிட்டார். குடும்பம் தான் முக்கியம் என்று சோனியா அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

அவர் எவ்வளவோ பேசிப் பார்த்தும் செல்வராகவன், சோனியா அகர்வால் பிரிவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் தன் மகள் விஷயத்திலாவது ரஜினிக்கு வெற்றி கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini:ரஜினியை இயக்கும் நெல்சன், ஏப்ரலில் ஷூட்டிங்: இன்னும் ஒரு சர்பிரைஸ் இருக்கு
இதற்கிடையே தன் அடுத்த பட இயக்குநரை முடிவு செய்துவிட்டாராம் ரஜினி. தலைவர் 169 படத்தை இயக்கப் போவது நெல்சன் திலீப்குமார் தானாம். ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு துவங்குமாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.