5 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மன்சுக் மாண்டவியா பெருமிதம்

புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
 
இதில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் போடப்பட்டோர் எண்ணிக்கை மட்டுமே 1.52 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும்  ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் நாடு முழுவதிலும் இதுவரை 5 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.