ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என, முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்டத் தேர்தல், மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில், பாஜகவுக்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பல முனை போட்டி என்று கூறினாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என்பது உண்மை என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஓய்வு பெற்ற
அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என, முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இவர்களது வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கூறியதாவது:

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் வாக்குறுதி, அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வேறு எந்தக் கட்சியும் பேசவில்லை. எனவே, சமாஜ்வாதி கட்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த வாக்குறுதி கண்டிப்பாக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாக்குறுதி வரவேற்கக் கூடியது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அகிலேஷ் யாதவின் தேர்தல் வாக்குறுதிக்கு, பாஜக தரப்பில் எந்தவொரு போட்டி வாக்குறுதி வெளியிடப்படவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.