தி.மு.க. மூத்த தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் இன்று முதல் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

சென்னை:

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளன.

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சி மாவட்டச்செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களுடன் சேர்ந்து ஆங்காங்கே ஓட்டு கேட்டும் வருகின்றனர்.

தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தினமும் மாலை 5.30 மணிக்கு காணொலி மூலம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 6-ந்தேதி கோவை, 7-ந்தேதி சேலம், 8-ந்தேதி கடலூர் மாவட்டத்திற்காக காணொலியில் பிரசாரம் செய்தார். இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வின் 2-ம் கட்ட முன்னணி தலைவர்களும் இன்று முதல் பிரசாரத்தில் இறங்குகின்றனர்.

தி.மு.க. பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை 4 மணிக்கு காட்பாடி தொகுதியிலும் மாலை 7 மணிக்கு வேலூர் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

10-ந் தேதி மாலை 4 மணிக்கு குடியாத்தம் தொகுதியிலும் அன்று மாலை 7 மணிக்கு அணைக்கட்டு தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். 12-ந் தேதி அரக்கோணம், சோளிங்கர் தொகுதியிலும் 13-ந் தேதி ராணிப்பேட்டை ஆற்காடு தொகுதியிலும் 15-ந் தேதி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். 16-ந் தேதி வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதியிலும் 17-ந் தேதி காட்பாடியிலும் பேசுகிறார்.

தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. இன்று 9-ந் தேதி மாலை அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். நாளை 10-ந் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் 11-ந் தேதி காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். 13-ந் தேதி ஆலந்தூர், 14-ந் தேதி தாம்பரம், பல்லாவரம் தொகுதியிலும், 15-ந் தேதி செங்கல்பட்டு, மதுராந்தகம் தொகுதியிலும் 17-ந் தேதி திருப்போரூர் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று காலை கரூரில் பிரசாரம் செய்தார். மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்

நாளை காலை (10-ந்தேதி) தஞ்சாவூரிலும் மாலையில் கடலூரிலும் பிரசாரம் செய்கிறார்.

12-ந் தேதி (சனிக்கிழமை) சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார். 14-ந் தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவில், மாலை 6 மணிக்கு திருநெல்வேலி, 15-ந் தேதி காலை மதுரை மாலையில் திண்டுக்கல், 16-ந் தேதி காலையில் சேலம் மாலையில் ஈரோடு, 17-ந் தேதி கோவையிலும் பிரசாரம் செய்கிறார்.

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை தூத்துக்குடியில் பிரசாரம் செய்தார். மாலையில் அருப்புக்கோட்டையில் பேசுகிறார். நாளை 10-ந் தேதி விருதுநகர், சாத்தூரிலும் மாலையில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரிலும் பேசுகிறார். 11-ந் தேதி காலை ராஜபாளையம், மாலை திருநெல்வேலி, 12-ந் தேதி காலை நாகர்கோவில், மாலை கொல்லங்கோடு, 15-ந் தேதி செங்கோட்டை தென்காசி, சுரண்டையில் பிரசாரம் மேற்கொள்கிறார். 16-ந் தேதி புளியங்குடி, சங்கரன்கோவிலில் பேசும் அவர் 17-ந் தேதி தூத்துக்குடியில் பிரசாரம் செய்கிறார்.

ஆ.ராசா எம்.பி. நாளை காலை 10 மணிக்கு பெரம்பலூரில் பிரசாரம் செய்கிறார்.

திருச்சி சிவா எம்.பி. 13-ந்தேதி நரசிங்கபுரம், ஆத்தூரில் பேசுகிறார்.

திண்டுக்கல் லியோனி இன்று மாலை திருவள்ளூரில் பிரசாரம் செய்கிறார். நாளை காலை திருத்தணியிலும் மாலையில் அரக்கோணம், சோளிங்கரில் பேசுகிறார்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் இன்று ராமநாதபுரம், கீழக்கரையில் பிரசாரம் செய்தார். மாலையில் ராமேஸ்வரம், பரமக்குடியில் பிரசாரம் செய்கிறார்.

பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று மாலை குளச்சல், வெள்ளிமலை, இரணியல் பகுதிகளில் பேசுகிறார். நாளை நாகர்கோவில், சுசீந்திரம், அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரியில் பேசுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.