10, 12-ம் வகுப்புகளுக்கு இன்று தொடங்குகிறது திருப்புதல் தேர்வு

சென்னை:
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19-ல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா 3-ம் அலை பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை  வெளியிட்டது. இதன்படி,  பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோல், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று தமிழ் பாடத்தேர்வு நடைபெறுகிறது.நாளை (வியாழக்கிழமை) 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஆங்கில பாடத்தேர்வு நடைபெற இருந்தது. 
இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் நடைபெற உள்ள 10, 12-ம் வகுப்புக்கான ஆங்கில பாடத் திருப்புதல் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, 17-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.