செல்வராகவனால் வெளிவரும் தனுஷின் இன்னொரு முகம்… இதென்னப்பா புது ட்விஸ்ட்…!

கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார்
தனுஷ்
. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. இதனிடையில் தனது அண்ணன்
செல்வராகவன்
இயக்கத்தில் ‘
நானே வருவேன்
‘ படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்..

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.

இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை இந்துஜா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இந்தப்படத்தை இயக்கவுள்ளார் செல்வராகவன்.

வாணி போஜன் நம்பிக்கையில் மண்ணள்ளி போட்ட ‘மகான்’ படக்குழு: ரசிகர்கள் அதிர்ச்சி..!

‘நானே வருவேன்’ படத்தில் இரண்டு விதமான கெட்டப்களில் நடிக்கவுள்ளார் தனுஷ். அவரின் கெட்டப் இன்றைய மாலை நாளிதழ்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு கெட்டப்பில் ஸ்டைலிஸ் இளைஞராக இருக்கும் தனுஷ், மற்றொரு கெட்டப்பில் நடுத்தர வயது தோற்றம் கொண்ட கெட்டப்பில் உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

நானே வருவேன்

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் இயக்கிய படங்களில் அவரை பல பரிணாமங்களில் காட்டியிருந்தார் செல்வராகவன். இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தில் இரண்டு கெட்டப்களில் தனுஷ் நடிப்பது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனிடையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் ‘
வாத்தி
‘ படப்பிடிப்பிலும் தனுஷ் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

பத்து தல Glimpse ஏன் இப்படி இருக்கு! படத்தில் நயன்தாரா வேடம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.