பாஜக அலுவலக தாக்குதல்: காவல்துறை கூறும் காரணங்கள் கட்டுகதை- அண்ணாமலை

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வினோத் என்ற நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடடை கருத்தில் கொண்டு வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் பொதுப் பிரச்னையாகவே தலையிட்டு போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே 10 குற்ற வழக்குகள் உள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய சதி உள்ளது. நீட் தேர்வை பாஜக ஆதரிப்பதால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறுவது நகைச்சுவையாக உள்ளது. கைதான நபருக்கு நீட் என்றால் என்னவென்று கூட தெரியாது.

காவல்துறை கூறும் காரணங்கள் கட்டுக்கதை. தடயத்தை காவல்துறை அழித்துள்ளது. சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறிய என்.ஐ.ஏ விசாரணை அவசியம்.

இதையும் படியுங்கள்..
பா. ஜனதா தொண்டர் கொலை: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.