99 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

பிளாக்பூல்
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உள்ள லங்காஷயர் பகுதியில்  99 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
மன அழத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டியின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை கண்ட அவரது குடும்பத்தினர் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்காணித்தனர்.
அதில் 48 வயதான வீட்டின் பராமரிப்பாளர் பிலிப் கேரி என்பவர்  அந்த மூதாட்டியின் அறைக்குள் நுழைவதையும், பின்னர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காட்சியை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து  கேரி கைது செய்யப்பட்டார். 
நீதிமன்றத்தில் தடயவியல் சான்றுகள் மற்றும் கேமரா காட்சிகளை வழக்கறிஞர்கள் முன் வைத்த போது கேரி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 
குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவு ஆறுதலைத் தரும் என்று நம்புவதாக இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோஃபி ரோஸ்டோல்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.