இப்படி தான் Apple Foladable iPhone இருக்குமாம்! கூடவே ஆப்பிள் உருவாக்கும் realityOS

ஆப்பிள் நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஐபோனை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை நிறுவன தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. என்றாலும் கூட, டெக் வல்லுநர்கள் வசமிருந்து இது குறித்த விவாதம் பெருகிக் கொண்டே செல்கிறது.

அதன் விளைவாக ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் (Apple Foldable iPhone) எப்படி இருக்கும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐபோனின் திரை அளவு 7.7″ அங்குலம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஹிஞ்சஸ் டிஸ்ப்ளேகளை இணைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எல்ஜி நிறுவனத்தின் எல்டிபிஓ LED டிஸ்ப்ளே இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போனா… இல்ல சினிமா கேமராவா… 40MP செல்பி, 2 டெலிபோட்டோ லென்ஸுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா!

எல்டிபிஒ என்பது குறைந்த வெப்பநிலை கொண்ட பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு ஆகும். இந்த டிஸ்ப்ளேக்களை தயாரிக்க, ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எல்ஜி நிறுவனம் பிரத்யேக ஆர்டர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரை 120Hz ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட் உடன் வரலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Apple Foldable iPhone-இல் சிம் ஸ்லாட் இல்லாமல், இ-சிம் உடன் களமிறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது ‘மேக் ரூமர்ஸ்’ தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களிலும் சிம் ஸ்லாட் இருக்காது என்று தெரியவந்துள்ளது.

முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!

ரியாலிட்டி ஓஎஸ் (Apple realityOS)

2023 தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் மெய்நிகர் தொழில்நுட்பத்தைக் (ஆக்மென்டட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி) கொண்ட ஹெட்செட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மெய்நிகர் தொழில்நுட்பத்தைச் சார்ந்த தகவல் சாதங்களை இயக்குவதற்காக ஆப்பிள் நிறுவனம் ரியாலிட்டி ஓஎஸ் (
Reality OS
) எனும் பிரத்யேக இயங்குதளம் ஒன்றை வடிவமைத்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

முன்னதாக 2017ஆம் ஆண்டிலும் இந்த rOS குறித்து சில தகவல்கள் கசிந்தது. ஆப்பிள் தயாரிப்புகள் குறித்து செய்தி வெளியிட்டு வரும் 9to5mac தளம் தற்போது இதனை உறுதிபடுத்தி இருக்கிறது. மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் வேளையில், ஆப்பிளின் இந்த நகர்வு டெக் வல்லுநர்களால் உற்று கவனிக்கப்படுகிறது.

சட்டச் சிக்கலில் ஆப்பிள்

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சில டேட்டிங் செயலிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஆப்பிள் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்படாத சில ஆன்லைன் பேமெண்ட் பயன்பாடுகள் மூலம் பணம் செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு நெதர்லாந்து நாட்டு அரசு உத்தரவிட்டது.

தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து நாட்டின் கண்காணிப்புக் குழு மூன்றாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை என்பது சுமார் 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாகவே அறிக்கை வெளியிட்டுள்ளதாக ஆப்பிள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JioBook Laptop: லேப்டாப் பிராண்டுகள் ஷாக்… சந்தையில் கால்பதிக்கும் ஜியோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.