கனேடிய குடியுரிமை பெறுவது உலகின் மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றில் வாழ்வதற்கும் பணி செய்வது முதலான ஏராளம் பலன்களை தருவதாகவும் காணப்படுகிறது.
ஆகவே, கனேடியர்கள் தங்கள் குடியுரிமை நிலையை வெளிநாடுகளில் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்கும் வழங்க விடும்புகிறார்கள். அதேபோல, கனேடிய பெற்றோரைக் கொண்ட பிள்ளைகளும் தாங்களே கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் என்று அழைக்கப்படும் கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு ஒரு அனுபவம் வாய்ந்த கனேடிய புலம்பெயர்தல் சட்டத்தரணி உதவி செய்ய முடியும். கொரோனா காலகட்டத்திற்கு முன்பு ஒரு கனேடிய குடியுரிமை விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்கு ஐந்து மாதங்கள் வரை ஆனது. ஆனால் கொரோனா காலகட்டத்தால் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இப்போது விண்ணப்பங்களைப் பரிசீலிக்க கூடுதல் காலம் எடுக்கிறது.
ஆகவே, குடியுரிமைக்கு இப்போதே விண்ணப்பிப்பது சீக்கிரம் கனேடிய குடியுரிமை பெற உதவும்.
கனேடிய குடியுரிமை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பொதுவாக, கனடாவில் பிறந்த பெற்றோரைக் கொண்ட வயது வந்தவர்கள், தாங்கள் கனேடிய குடியுரிமைக்கு தகுதியுடையவர்கள் என்று எண்ணியும் அது குறித்து உறுதியாக அறியாத நிலையில், கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதுண்டு. அதுபோக, வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகளையுடைய பெற்றோர், தங்கள் பிள்ளைகள் சார்பிலோ அல்லது பிள்ளைகளே தங்களுக்காகவோ இந்த கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறார்கள்.
அதற்காக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, விண்ணப்பிப்பவரின் பெற்றோர்களில் ஒருவராவது அவர் பிறக்கும் நேரத்தில் கனேடிய குடிமகனாக இருந்தார் என்பதற்கான ஆதாரத்தை எதிர்பார்க்கிறது. உதாரணமாக, பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், குடியுரிமை அட்டை அல்லது குடியுரிமை சான்றிதழை ஆதாரமாக வழங்கலாம்.
கனேடிய அரசின் விண்ணப்பத்திற்கான மொத்தக் கட்டணம் 75 கனேடிய டொலர்கள் மட்டுமே.
விண்ணப்பம் முழுமையானதா என சரிபார்க்கும் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, உங்களுக்கு acknowledgment of receipt ஒன்றை அளிக்கும்.
உங்கள் விண்ணப்பத்தை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், உங்களுக்கு ஒரு கனேடிய குடியுரிமை சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.