கோட்டாபயவை கட்டுப்படுத்தும் பலமான பெண் – ஹோட்டலுக்கு அழைத்து வந்தவரால் சர்ச்சைஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்த பெண்ணாக கருதப்படும் ஞானக்காவை கொழும்பு ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து வந்துள்ளமை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபுக்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரபல சோதிடர் என அழைக்கப்படும் அநுராதபுரம் ஞானக்காவின் நகங்களை அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஞானக்கா சென்ற அழகு நிலையம் ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய பிரபலத்தினால், ஞானக்காக அங்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஞானக்கா என்ற பெண் அனுராதபுரத்தில் ஆலயம் ஒன்றை நடத்தி வருவதுடன், தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நம்பிக்கைக்குரிய மந்திரவாதியாக மாறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமான பலரும் ஞானக்காவின் தீவிர பக்தர்கள் ஆகும்.

சமகால அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட முக்கிய அரசியல் முடிவுகளின் பின்னணியில் ஞானக்கா உள்ளதாக கடந்த காலங்களில் சமூக ஊடகங்கள் வழியாக பரவலாக பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.