தற்கொலை செய்துகொண்ட சிறுமி; வீடியோ ஆதாரத்தால் போக்சோவில் கைதான காவலர் – நடந்தது என்ன?!

சென்னையைச் சேர்ந்த சிறுமிக்கும், சிறைக் காவலர் மகேஷ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சமூகவலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது காவலர் மகேஷ், சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் சிறுமியை காவலர் மகேஷ் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை செய்வதற்கு முன்பு சிறுமி, வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் தன்னுடைய இந்த முடிவுக்கு யார் காரணம் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில், `சமூக வலைதளம் மூலம் பழகிய சிறைக் காவலர் மகேஷ், என்னுடன் நெருங்கிப் பழகினார். அதனால் இரண்டு முறை கர்ப்பம் அடைந்தேன். அப்போது கருக்கலைப்பு செய்தேன். அதன்பிறகும் என்னை மகேஷ் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார். அதனால்தான் நான் இந்த முடிவை எடுக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்தனர். அப்போது தற்கொலை வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது. அதனால், காவலர் மகேஷ் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் சிறுமியின் தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Arrest (Representational Image)

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கை கையில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், சிறுமி அளித்த வீடியோ வாக்குமூலத்தின் அடிப்படையில் காவலர் மகேஷிடம் விசாரித்தனர். விசாரணையில் சிறுமியின் வாக்குமூலம் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து மகேஷை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவலர் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.