திருப்பதியில் 16ந் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் – பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை

திருமலை:
உலக அளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில்,  கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 
மேலும் திருப்பதி ஏழுமலையான் தரிசிக்க 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டது. 
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரணப் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இதை பெற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்… அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்ரி மலையை புனித தலமாக மேம்படுத்த 16-ந்தேதி பூமி பூஜை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.