தேர்வு எழுதிய மாணவர்களின் பைகளில் ஒன்றை "டிப் டாப்பாக" ஆடை அணிந்து வந்து திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள்.! <!– தேர்வு எழுதிய மாணவர்களின் பைகளில் ஒன்றை &quot;டிப் டாப்பாக&quot; ஆட… –>

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு டிப்-டாப் உடையில் வந்து, தேர்வறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பையைத் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில், 3வது மாடியில் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர், தனது பை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, முகக்கவசம் அணிந்து டிப்-டாப் ஆடையில் வந்த மர்ம நபர், தேர்வறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பைகளில் இருந்து குறிப்பிட்ட ஒரு பையை மட்டும் எடுத்து சென்றது தெரியவந்தது.

மாணவர் தனது விலையுயர்ந்த செல்போனை பையில் வைப்பதை முன் கூட்டியே நோட்டமிட்டு அந்த பையை மட்டும் திருடி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.