அடுத்த வாரத்தில் இந்தியா வருகிறது கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள்

பிரான்சில் இருந்து கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன.
பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, 2020ல் முதலாவதாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன.
image
அதன் பிறகு பல குழுக்களாக இதுவரை மொத்தம் 33 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 3 போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன. அதற்கான இறுதிக்கட்ட சோதனைப் பணிகள் பிரான்சில் நடைபெற்று வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.