நாளை முதல் வழக்கம் போல் மின்சார ரயில் சேவை.!

சென்னையில் நாளை முதல் முழு அளவு எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த சூழலில் சென்னை புறநகர் ரயில் சேவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா காலத்திற்கு முன் வழங்கப்பட்ட அதே எண்ணிக்கையிலான சேவைகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை அரக்கோணம் வழித்தடத்தில் 254 ரயில் சேவைகளும், சென்னை குமிடிப்பூண்டி வழித்தடத்தில் 84 ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை வழித்தடத்தில் 80 ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை செங்கல்பட்டு வழித்தடத்தில் 240 ரயில் சேவைகளும் நாளை முதல் வழங்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.