பாகிஸ்தானில் கல்லால் அடித்து ஒருவர் கொலை – குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இம்ரான்கான் உத்தரவு

லாகூர்:
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த சனிக்கிழமையன்று ஒரு நபர் புனித நூல் பக்கங்களை கிழித்து விட்டதாக தகவல் பரவியதை அடுத்து, கும்பல் ஒன்று அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் உடலை மரத்தில் அவர்கள் தொங்க விட்டனர். 
அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் மரத்தில் இருந்து உடலை கீழே இறக்க முயன்ற இரண்டு போலீசார் மீது அந்த கும்பல் கற்களை வீசியதில் அவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார். சட்டத்தை பொது மக்கள் கையில் எடுத்துக் கொள்வதை தமது அரசு சகித்துக் கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 
மேலும் இது குறித்து பஞ்சாப் காவல்துறைத் தலைவரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் இம்ரான்கான் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.