ஹிஜாப் விவகாரம்: பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு – உடுப்பி மாவட்டத்தில் நாளைமுதல் அமல்

பெங்களூர்:
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை சுற்றி நாளை (14-ந்தேதி) காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்துள்ளார்.
இதையொட்டி பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.