மேகதாது அணை திட்டம் – தமிழகத்தின் எதிர்ப்பில் நியாயமில்லை என்கிறார் தேவகவுடா

பெங்களூரு:
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
இந்த அணை கட்டப்பட்டால் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு மேகதாது அணைத் திட்டத்திற்கு தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய சுற்றுச்சூழல்துறை  இணை மந்திரி அஸ்வினி குமார், மேகதாது அணை  கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக  முடிவு எட்டப்பட்டால்  மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான, முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளதாவது: 
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் நியாயமற்ற முறையில் ஆட்சேபம் தெரிவிக்கிறது.இந்த திட்டம் நீண்ட நாட்களுக்கு முன் முன்மொழியப்பட்டது. எங்கள் சொந்த நிலத்தில், சொந்த பணத்தில் உருவாக்குகிறோம். 
அணை கட்டும் இடத்தில் வன பகுதி நிலம் இருந்தால் நீரில் மூழ்கப் போகிறது,  அது எங்கள் பகுதியிலேயே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.