இந்தியா-நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது..!

குயின்ஸ்டவுன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி கடந்த 12-ந்தேதி குயின்ஸ்டவுனில் நடைபெற்றது. அந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி எழுச்சி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.