ரஜினியிடம் இருக்கும் அந்த பழக்கம்..பல வருடங்கள் கழித்து வெளியான ரகசியம்..!

நடிகர்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான நடிகர். இவரது படங்கள் வெளியாகிறது என்றால் அன்று ரசிகர்களுக்கு திருவிழாதான். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள் எப்படி கொண்டாட படுகிறதோ அதேபோல் ரஜினியின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் அதை திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

மேலும் ரஜினியின் படங்கள் மாஸ் கமர்ஷியல் வகையை சார்ந்தே இருப்பதால் அனைத்து வகையான ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துவிடும். இந்நிலையில் தற்போது ரஜினியைப்பற்றி பலருக்கும் அறியாத ஒரு தகவல் வந்துள்ளது.

தனுஷ் – ஐஸ்வர்யா போல் பிரியும் மற்றுமொரு நட்சத்திர ஜோடி?..வருத்தத்தில் ரசிகர்கள்.

அதாவது
ரஜினி
எப்போதும் இயக்குனரிடம் கதைக்கேட்கும் போது தன் வீட்டில் வைத்துதான் கேட்பாராம். மேலும் கதை கேட்டு முடிந்தவுடன் அந்த கதை விவாதங்களையும் தன் வீட்டில் தான் வைப்பாராம். இதை அவர் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார்.

இந்நிலையில்
அருணாச்சலம்
படத்தின் கதைவிவாதத்திற்காக இயக்குனர்
சுந்தர் சி
,
கிரேசி மோகன்
உட்பட படக்குழு ரஜினியின் இல்லத்திற்கு சென்றார்களாம். கிரேசி மோகனுக்கு எப்போதும் வெற்றிலை போடும் பழக்கம் இருக்கும். வெற்றிலைபாக்கு போட்டுவிட்டுதான் அவர் கதை வசனமே எழுதுவாராம்.

இந்நிலையில் ரஜினியின் வீட்டில் எப்படி அவர் முன் வெற்றிலைபாக்கு போடுவது என்று சங்கோஜப்பட்டாராம் கிரேசி மோகன். இதையறிந்த ரஜினி இதில் என்ன இருக்கிறது என கூறி, அவர் வெற்றிலை பாக்கு போடா ஏற்பாடு செய்து, வெற்றிலையை துப்புவதற்காக அருகில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு, இதில் துப்பிக்கொள்ளுங்கள் என்றாராம் ரஜினி.

இந்த செயல் கிரேசி மோகன் உட்பட படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்ததாம். 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படம் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – கவித்துவமான Commercial படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.