டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் கடைசி ஆஃபர்.. எடுத்துக்கிட்டா நல்லது.. இல்லாடி கஷ்டம்..!

இந்தியாவில் டெஸ்லா கார்களை நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா மத்திய அரசிடம் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் சிறப்பு வரிச் சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து நீண்ட காலமாகப் பல முறை நேரடியாக மற்றும் மறைமுகமாக ஆலோசனை செய்யப்பட்டது.

ஆனால் இதுவரை எவ்விதமான முடிவும் எடுக்கப்படாத நிலையில் மத்திய அரசு தற்போது புதிய சலுகையை அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. அரசு ஓகே சொல்லுமா.. காத்திருக்கும் டாடா..!

டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரிச் சலுகை பெற வேண்டும் என்றால் இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும், ஆனால் டெஸ்லா ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ஜெர்மனி நாடுகளில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்துள்ளதால் இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைக்க முடியாது எனக் கூறியது.

மத்திய அரசு

மத்திய அரசு

இதில் கடுப்பான மத்திய அரசு இந்தியாவுக்கும் சாதகமாக இல்லாத பட்சத்தில் வரிச் சலுகை கொடுக்க முடியாது என அறிவித்து. உடனே டெஸ்லா மாற்று யோசனையை முன்வைத்தது, இந்தியாவில் கார் உற்பத்தி அல்லது அசம்பிளி தொழிற்சாலையை அமைக்க முடியாத நிலையில் கூட்டணி முறையில் உதிரிப்பாகங்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை முன்வைத்தது.

வேலைவாய்ப்பு
 

வேலைவாய்ப்பு

ஆனால் மத்திய அரசு உதிரிப்பாகங்கள் உற்பத்தி மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது என மறுத்துவிட்ட நிலையில் நீண்ட காலம் டெஸ்லா – மத்திய அரசுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது.

500 மில்லியன் டாலர்

500 மில்லியன் டாலர்

இந்நிலையில் இன்று வெளியான தகவல்கள் படி டெஸ்லா இந்தியாவில் இருந்து 500 மில்லியன் டாலர் மதிப்பிலான உதிரிப்பாகங்களைத் தயாரித்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வரிச் சலுகை அளிப்பதாக ஒரு ஆஃபர் டெஸ்லாவுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளதாகப் பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஓகே, ஆனா ஒரு கண்டிஷன்

ஓகே, ஆனா ஒரு கண்டிஷன்

இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ள டெஸ்லா தயார் என்ற நிலையில் முக்கியமான கோரிக்கை வைத்துள்ளது. அதாவது டெஸ்லா ஆகஸ்ட் மாதம் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான உதிரிப்பாகங்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்தது.

தொடர் அதிகரிப்பு

தொடர் அதிகரிப்பு

இதன் படி முதலில் 100 மில்லியன் டாலர் அளவிலான பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்து, ஒவ்வொரு வருடம் உதிரிபாகங்களின் தரம் மற்றும் தேவைகளைப் பூர்த்திச் செய்யும்போது ஏற்றுமதி அளவீட்டை 10 முதல் 15 சதவீதம் எனப் படிப்படியாக உயர்த்தி 500 மில்லியன் டாலர் அளவீட்டை அடைய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 குற்றம்சாட்டு

குற்றம்சாட்டு

இந்திய எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் உலகளவில் முன்னோடியாக இருக்க ஆர்வமாக இருக்கும் நிலையில், இந்த ஆர்வத்தை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு வருவதாக டெஸ்லா-வை பல அரசு உயர் அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

டெஸ்லா விளக்கம்

டெஸ்லா விளக்கம்

இதேபோல் டெஸ்லா நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார்களை முதலில் வரி சலுகையுடன் விற்பனை செய்யத் துவங்கிய பின்பு படிப்படியாக அனைத்தையும் விரிவாக்கம் செய்யத் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் கார் விற்பனை

எலக்ட்ரிக் கார் விற்பனை

இதேபோல் இந்திய சந்தை விலை போட்டி அதிகம் கொண்ட நாடாக இருக்கும் வேளையில் மொத்த கார் விற்பனையில் 1 சதவீதம் மட்டுமே எலக்ட்ரிக் கார்களாக இருக்கும் நிலையில் எப்படி அதிகளவிலான முதலீட்டையும், ஏற்றுமதிக்கான உத்தரவாதத்தையும் அளிக்க முடியும் என டெஸ்லா தரப்பில் இருக்குக் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi Govt last offer to Tesla: Buy $500 million of local auto parts get tax break

Modi Govt last offer to Tesla: Buy $500 million of local auto parts get tax break டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் கடைசி ஆஃபர்.. எடுத்துக்கிட்டா நல்லது.. இல்லாடி கஷ்டம்..!

Story first published: Wednesday, February 16, 2022, 20:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.