அசைக்க முடியாத சீன நிறுவனங்கள்.. 2 வருடத்தில் மொத்தமும் மாறியது..! #Xiaomi

இந்திய சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு மோடி அரசு சீனாவுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. குறிப்பாக முதலீட்டுக்குத் தடை, சீன செயலிகளுக்குத் தடை, சீன உற்பத்தி நிறுவனங்கள் கண்காணிப்பு எனப் பல நடவடிக்கைகளை எடுத்தது.

இந்திய சீனா எல்லையில் இருநாட்டு ராணுவத்திற்கு மத்தியில் நடந்த தாக்குதலின் போது கூட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சியோமி தனது MI பிராண்டை மேக் இன் இந்தியா என்று கூட மாற்றியது நினைவிருக்கும்.

ஆனால் கடந்த 2 வருடத்தில் மொத்தமும் மாறி சீன நிறுவனங்கள் தான் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சீன அரசு அறிவித்த லாக்டவுன்.. 14 வருட உச்சத்தில் அலுமினியம் விலை.. என்ன நடக்குது..?!

 இந்தியா - சீனா

இந்தியா – சீனா

2020 முதல் இந்தியா – சீனா மத்தியில் பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், மத்திய அரசு சீனாவுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையிலும் சியோமி, லெனோவோ, விவோ ஆகிய 3 நிறுவனங்களின் இந்திய வர்த்தகத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வருகிறது.

 சியோமி, லெனோவோ, விவோ

சியோமி, லெனோவோ, விவோ

2020-21 நிதியாண்டு வர்த்தகத்தை ஒப்பிடுகையில் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனமான லெனோவோ -வின் விற்பனை அதிகரித்துள்ளது. சியோமி, விவோவின் விற்பனை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே குறைந்துள்ளது. மேலும் அரசு டென்டர்களில் பங்குபெற லெனோவோ நிறுவனத்திற்கு மத்திய அரசின் DPIIT அமைப்பு ஒப்பதல் அளிக்காத நிலையில் விற்பனை அளவு அதிகரித்துள்ளது வியப்பாக உள்ளது.

 IDC இந்தியா
 

IDC இந்தியா

இந்நிலையில் சந்தை ஆய்வு அமைப்பான IDC இந்தியா நிறுவனத்தின் தலைவர் நவ்கேந்தர் சிங் கூறுகையில் 2020 இல் இந்தியா-சீனா எல்லை தாக்குதலின் போது சீன ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் பிராண்டுகளின் விற்பனையில் எந்தப் பாதிப்பும் இல்லை. அப்படிப் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அது சப்ளை மற்றும் லாக்டவுன் காரணமாவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 வருவாய் அளவீடுகள்

வருவாய் அளவீடுகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் சீனாவின் சியோமி டெக்னாலஜி மார்ச் 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில் வருவாய் 6% சரிந்து ரூ. 35,504 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் விவோ நிறுவனத்தின் வருவாயில் 1% சரிந்து 24,724 கோடி ரூபாயாக உள்ளது. லெனோவோ நிறுவனத்தின் வருவாய் 14 சதவீதம் அதிகரித்து 10,389 கோடி ரூபாயாக உள்ளது. இது இந்திய அரசிடம் இந்நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ள அளவுகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Anti-China actions doesn’t affect China electronics brand sales in India

Anti-China actions doesn’t affect China electronics brands sales in India அசைக்க முடியாத சீன நிறுவனங்கள்.. சீனாவுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகள் வீண்..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.