ரஷ்யா படையெடுத்தால்.. இந்தியா எங்கள் பக்கம் நிற்கும்.. அமெரிக்கா பரபர தகவல்!

உக்ரைன் மீது
ரஷ்யா
படையெடுத்தால்,
இந்தியா
அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

ஆனால் இந்தியா, ரஷ்யாவைப் பகைத்துக் கொள்ளுமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசுகள் பதவியில் இருந்த வரை இந்தியாவின் மிக நெருக்கமான பங்காளியாக ரஷ்யா இருந்து வந்தது. மிகச் சிறந்த வரலாற்று உறவாக இது நீடித்து வந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் வெளியுறவுக் கொள்கையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் காரணமாக அமெரிக்காவின் பக்கம் இந்தியா திரும்பியது. ரஷ்யாவுடனான உறவில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டது.

எல்லையில் சீனாவின் வாலாட்டல் அதிகரித்து வந்த நிலையில் அதை ரஷ்யா தட்டிக் கேட்காமலும், தட்டி வைக்காமலும் இருப்பதால்தான் அமெரிக்காவின் தோழமையை இந்தியா நாடியதாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை இழுத்துள்ளது
அமெரிக்கா
. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், அந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொஞ்சம் கூட படைகளைக் குறைக்கலை.. உக்ரைனுக்கு ரஷ்யா போடும் அதிரடி ஸ்கெட்ச்!

இதுகுறித்து நெட் பிரைஸ் கூறுகையில், சர்வதேச எல்லை தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா மிகவும் உறுதியாக இருப்பதை நாங்கள் அறிவோம். படை பலத்தால் எல்லையை மாற்றியமைப்பதை நாங்களும் விரும்பவில்லை, இந்தியாவும் விரும்பாது.

சமீபத்தில் மெல்போர்ன் நகரில்நடந்த குவாட் கூட்டத்தில் உக்ரைன் மீதான ரஷ்ய நிலைப்பாடு குறித்து இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. உக்ரைன் விவகாரத்தை தூதரக ரீதியிலும், அமைதி வழியிலுமே தீர்வு காண வேண்டும் என்று அனைத்து நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒரு மனதாக தெரிவித்தனர் என்றார் அவர்.

மேலும் இந்திய எல்லையில் சீனா வாலாட்டுவதை மறைமுகமாக குறிப்பிட்ட ரைஸ், பெரிய நாடுகள், ஒருபோதும் சிறிய நாடுகளை சீண்டிப் பார்க்கக் கூடாது. அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றார்.

“இது வரலாறு மிஸ்டர் இடியட்”.. வாயை விட்ட நபரை வச்சு செய்த கஸ்தூரி!

உண்மையில் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன், 5 யூனிட் எஸ் 400 ஏவுகணைகள் வாங்குவது தொடர்பான மிகப் பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று கூட மிரட்டியது. ஆனால் இந்தியா அதை நிராகரித்து விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்பது நினைவிருக்கலாம்.

தேவையில்லாவிட்டால் இந்தியாவை மிரட்டுவதும், தேவைப்பட்டால் காலில் வந்து விழுவதும்தான் அமெரிக்காவின் வாடிக்கை. இந்த நிலையில் இப்போது ரஷ்யாவுக்கு எதிரான விவகாரத்தில் அது இந்தியாவை மறமுகமாக மிரட்ட ஆரம்பித்துள்ளது. அதாவது உக்ரைன் விவகாரத்தில் நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தால், சீனா விவகாரத்தில் உங்களுக்கு சாதகமாக நாங்கள் நடப்போம் என்பதுதான் அந்த மறைமுக மிரட்டலாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.