முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி – பாஜக தேசிய தலைவர் பேச்சு

சரவஸ்தி:
உத்தர பிரதேச மாநிலம் சரவஸ்தி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,
வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஜன்தன் கணக்குகளை கேலி செய்தார்கள் என்றும், ஆனால் விவசாயிகளுக்கு இப்போது அதன் உண்மையான அர்த்தம் புரிந்து விட்டது எனவும் கூறினார்.
3 மாதங்களுக்கு ஒருமுறை 10.50 கோடி விவசாயிகளின் கணக்குகளில் தலா ரூ.2000 வரவு வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வகுப்புவாத அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ,வங்கதேசத்திலோ,ஈரானிலோ,ஈராக், இந்தோனேசியாவிலோ சட்டப்பூர்வ முத்தலாக் கிடையாது என்பது தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 
நடைமுறையில் இருந்த முத்தலாக் முறையை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் நமது மதச்சார்பற்ற தேசத்தில் வாழும்
கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி சுதந்திரம் அளித்துள்ளதாகவும் நட்டா தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.