உக்ரைன், ரஷியா செல்லும் விமானங்கள் ரத்து- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. அங்கு வசித்து வருபவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.

உக்ரைன் – ரஷியா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அந்த நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் விமான போக்கு வரத்து தொடங்கப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.