அரியலூர்-மணப்பாறை நகராட்சி யாருக்கு?: சமபலத்தில் தி.மு.க-அ.தி.மு.க.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கு, 34 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அரியலூர் நகராட்சியில் 4 மேஜைகளில் 9 சுற்றுகளாக இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேட்டைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் நகராட்சியை கைப்பற்றும் முயற்சியில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. சுயேட்சையாக வெற்றி பெற்ற 4 கவுன்சிலர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார்களோ அந்த கட்சியே நகராட்சியை கைப்பற்றும். எனவே அரியலூர் நகராட்சியை பொறுத்தவரை சுயேட்சைகள் கையில்தான் உள்ளது.

அரியலூர் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:-

1-வது வார்டு-ஜேசுமேரி லீனஸ் (சுயேட்சை)

2-வது வார்டு- செல்வராணி பரமேஷ்வரன் (தி.மு.க.)

3-வது வார்டு – சத்யன் (தி.மு.க.)

4-வது வார்டு – கண்ணன் (அ.தி.மு.க.)

5-வது வார்டு- சாந்தி கலைவாணன் (தி.மு.க.)

6-வது வார்டு – ரேவதி ராமு (.தி.மு.க)

7-வது வார்டு -கலியமூர்த்தி (சுயேட்சை)

8-வது வார்டு – ராஜேந்திரன் (அ.தி.மு.க.)

9-வது வார்டு – மகாலட்சுமி (அ.தி.மு.க.)

10-வது வார்டு – இன்பவள்ளி (அ.தி.மு.க.)

11- வது வார்டு இஸ்மாயில் (அ.தி.மு.க.)

12-வது வார்டு – மலர்கொடி மனோகரன் (சுயேட்சை)

13-வது வார்டு – வெங்கடாஜலபதி (அ.தி.மு.க.)

14-வது வார்டு – ஜெயந்தி குணா (தி.மு.க.)

15-வது வார்டு – ராணி (தி.மு.க.)

16-வது வார்டு – ராஜேஸ் (தி.மு.க.)

17-வது வார்டு -ஜீவா (அ.தி.மு.க.)

18-வது வார்டு – புகழேந்தி (சுயேட்சை)

இதேபோல் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா 11 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றிவாகை சூடியுள்ளனர். இதனால் அங்கும் நகராட்சியை கைப்பற்ற போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.