பெரும் ரசிகர் கூட்டத்தில் சிக்கி சின்னா பின்னமான ஷகிலா..! பிறகு என்ன செய்தாரு தெரியுமா…?

நடிகை
ஷகிலா
ரசிகர் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு திக்குமுக்காடிய வீடியோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது.மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படத்தின் துணை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா.பாலுணர்வு கிளர்ச்சியூட்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்ந்துக் கொண்டு
புகழ்
பெற்றார்.

90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தார் ஷகிலா. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. ஷகிலா கிட்டத்தட்டட 110க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆபாச படங்களில் மட்டுமே நடித்து வந்த ஷகிலா, குணசித்திர வேடம், நகைச்சுவை கதாபாத்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

சூடு தலைக்கு ஏறுதே…! கறுப்பு நிற உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்
குக் வித் கோமாளி
நிகழ்ச்சியின் மூலம் ஷகிலா மீதான கண்டோட்டமே மக்களுக்கு மாறிவிட்டது. ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது.

அதேபோல ஷகிலா
மிலா
என்ற மகளை வளர்த்து வருகிறார். திருநங்கையான மிலா சினிமாத்துறையில் நடிகை மற்றும் பேஷன்டிசைனர் ஆவர். இவர்கள் இருவரும் இணைந்து பல போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர். திருநங்கையான மிலா கர்ப்பகாலபோட்டோஷூட் நடத்தி அனைவரையும் அச்சசரியத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், ஷகிலா மற்றும் அவரது மகள் மிலாவும் கடை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.அங்கு,ரசிகர்களின் பெரும் கூட்டத்தில் ஷகிலாவும் அவரது மகளும் சிக்கிக் கொண்டனர். பின்னர், அந்த கடையில் இருந்தவர்கள் கூட்டத்தை விலக்கி ஷகிலாவை பாதுகாப்பாக காரில் ஏற்றிவிட்டு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோவை ஷகிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.