வலிமை FDFS: படம் பார்த்த பிரபலங்கள் சொல்வதென்ன?

வலிமை திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று வரும் பிரபலங்கள், தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். அருண் விஜய், யாஷிகா ஆனந்த், இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் காட்சியைப் பார்க்க சென்றிருந்தனர். படத்தில் நடித்திருந்த கார்த்திகேயா, ஹுமா குரைஷி, தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் ரோகினி திரையரங்கத்தில் முதல் காட்சியை ரசிகர்களோடு பார்த்தனர்.

அருண் விஜய், ‘அஜித் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்ரீட்’ என்று படம் பார்த்த பிறகு ட்விட் செய்துள்ளார். யாஷிகா ஆனந்த் படத்தின் பெயர் திரையில் வரும் வீடியோ கிளிப் ஒன்றைப் பகிர்ந்து “தலைக்காக எது வேண்டுமானாலும்…” என பதிவிட்டுள்ளார். திலீப் சுப்பராயன், “நான்கு மணி காட்சி தொடங்கியிருக்கிறது, பவர் மற்றும் ஸ்பீட் உணர முடிகிறது” என ட்வீட் செய்திருந்தார். விக்னேஷ் சிவன், விக்ரம் பிரபு, வரலட்சுமி சரத்குமார் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தனர். ‘நான் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் வாங்கி தருவேன்’ என உறுதிமொழியோடு தேர்தலைச் சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன், வலிமை படத்துக்கு தன் வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு தனக்கு முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைத்ததாக பதிவிட்ட ட்வீட்டில், பிரேம்ஜி அமரன், நடிகர் கிருஷ்ணா தங்களுக்கும் ஒரு டிக்கெட் எனக் கேட்டிருந்தனர்.

இப்படியாக பிரபலங்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் படம் குறித்த தங்களின் கருத்தைப் பதிவு செய்திருக்கின்றனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.