உ.பியில் கார் விபத்து: காயமின்றி தப்பினார் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர்

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜிபூரின் ஜமானியா, முஹமதாபாத் உள்ளிட்ட பல்வேறு சட்டசபை தொகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
இன்று காலை வாரணாசியில் இருந்து தனது சொந்த ஊரான காஜிபூருக்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென ராஜ்காட் பாலத்தின் சரிவில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தூண் மீது மோதியது. இதில் காரின் இடது பக்கம் சேதமடைந்தது. காரின் ஒரு சக்கரமும் பஞ்சர் ஆனது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் ஆளுநரை பத்திரமாக மீட்டு மாற்று காரில் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆளுநர் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ராம்நகர் காவல் நிலையப் பொறுப்பாளர் அஷ்வினி பாண்டே தெரிவித்தார்.
    
இதையும் படியுங்கள்.. ஆன்லைன் வகுப்புகள் கிடையாது- டெல்லியில் ஏப்ரல் 1 முதல் அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.