சிவாலயத்திற்கு உரிமை கொண்டாடிய நாடுகள்! சர்வதேச நீதிமன்றத்தில் வென்றது யார்?

புதுடெல்லி: இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி நாள் இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகள் கொண்டாடுகின்றன. 

பல நாடுகளில் சிவபெருமானின் புராதனமான கோயில்கள் உள்ளன. ஒரு சிவன் கோவிலுக்கு (Lord Shiva Temple) இரு நாடுகள் உரிமை கொண்டாடி, அதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.

இறுதியில்  எந்த நாட்டுக்கு அந்த முக்கியமான சிவன் அருள்பாலித்தார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். இதிலிருந்து புரியும் முக்கியமான விஷயம் என்னவென்றால், சிவ வழிபாடு என்பது உலகம் முழுவதும் விரவியிருந்தது, இன்றும் உலகமே கொண்டாடும் நாளாக மகாசிவராத்திரி பண்டிகை இருக்கிறது என்பதுதான்.

மேலும் படிக்க | கம்யூனிஸ்ட் நாட்டில் சிவராத்திரி! 1000 ஆண்டு பழமையான சிவ வழிபாடு

கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடிய சிவன் கோவில் டாங்ரெக் மலைத்தொடரில் கெமர் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டது,

 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ப்ரீஹ் விஹார் என்று பெயரிடப்பட்ட இந்த சிவன் கோவில் அமைந்திருக்கும் இந்த மலைத்தொடர், கம்போடியாவிற்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இயற்கையான எல்லையாக இருந்தன. 

இந்த கோவிலைப் பற்றிய சர்ச்சை நீண்டகாலம் வரை எழவில்லை.  நாடுகளின் எல்லைகள் நவீன காலத்தில் தீர்மானிக்கப்பட்டபோது தான் பிரச்சனை எழுந்தது.  

மேலும் படிக்க | மகா சிவராத்திரியும், சிவனின் வடிவங்களும்

அதோடு, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான், நீண்ட காலமாக இந்த மலைத்தொடரில் இந்தக் கோயில் உள்ளது என்பது பரவலாக தெரியவந்தது. உண்மையில் இந்த கோவிலுக்கு செல்வதற்கான பாதை மிகவும் மோசமாக இருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்த கோயில் வெளிநாட்டவரால் உலகின் பார்வைக்கு வந்தது. இதற்குப் பிறகு, உணர்ச்சிகரமான மற்றும் பழம்பெருமை காரணமாக, ஆலயத்தின் உரிமை குறித்து தாய்லாந்து மற்றும் கம்போடியாவில்  சர்ச்சை தொடங்கியது. 

DEVOTIONAL

Dangrek மலைத்தொடர் தொடர்பான கணக்கெடுப்பு பணி 1907ம் ஆண்டு துவங்கியது. பிரேஹ் விஹார் பகுதியின் அனைத்து கோயில்களும் கம்போடியாவுக்குச் செல்லும் வகையில் பிரெஞ்சு அதிகாரிகள், இரு நாடுகளுக்கும் எல்லைகளைப் பிரித்து வரைபடத்தை உருவாக்கினர்.

ஆனால் இந்த கோவில் தங்களுக்கு வேண்டும் என தாய்லாந்து நாட்டில் குரல்கள் எழுந்தன. அதற்கு ஏந்த எதிர்வினையும் ஏற்படவில்லை.

மேலும் படிக்க | சீனாவில் இந்து மதத்தின் சான்றுகள்

1954 இல் தாய்லாந்து ஆக்கிரமித்தது
1954 இல் பிரெஞ்சுப் படைகள் கம்போடியாவை விட்டு வெளியேறியபோது, ​​தாய்லாந்து, புராதனமான சிவன் கோவிலை ஆக்கிரமித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கம்போடியா, சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது. 

கோவில் ஆக்கிரமிப்பு விவகாரம் இரு நாடுகளிலும் பெரிய அரசியல் பிரச்சினையாக மாறியதால், அது மிகவும் தீவிரமானது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்தன. 

சர்வதேச நீதிமன்றத்தில் என்ன நடந்தது? 
சுவாரஸ்யமாக, இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்தில் தொடங்கியபோது, ​​​​கோயிலின் கலாச்சார பாரம்பரியத்தை நீதிமன்றம் கேட்கவில்லை.

சியெம், சியாம் அல்லது சியாமா என அழைக்கப்பட்ட தாய்லாந்து நாடு, 1907 இல் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை ஏற்றுக் கொண்டதை சுட்டிக்காட்டிய சர்வதேச நீதிமன்றம், பல தசாப்தங்கள் கழித்து சிவன் கோவிலுக்கு சொந்த கொண்டாடுவதும் ஆக்ரமிப்பதும் சரியில்லை என்று கருதியது. 

மேலும் படிக்க | மகாசிவராத்திரியில் கோள்களின் அற்புத சங்கமம்! சிவ பூஜை செய்யும் முகூர்த்தம்

தாய்லாந்து தரப்பில் இருந்து பிரித்தானிய முன்னாள் அட்டர்னி ஜெனரல் சர் ஃபிராங்க் சோஸ்கிகேவும், கம்போடியா தரப்பில் அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் டீன் ஐக்சனும் வாதிட்டனர். சர்வதேச நீதிமன்றத்தில் இரு ராணுவ வீரர்களுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இறுதியாக இந்த வழக்கின் தீர்ப்பு, 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது. தீர்ப்பு கம்போடியாவுக்கு சாதகமாக வந்தது. அதோடு, சிவன் கோவிலை ஆக்ரமித்தபோது கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் திருப்பித் தர தாய்லாந்திற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கம்போடியாவின் ப்ரீ விஹார் மாகாணத்தின் பெயரால் அறியப்படும் சிவன் கோவில் உலக பாரம்பரியம் மிக்கது. கோயில் தாய்லாந்திற்கு அருகில் இருந்தாலும், தாய்லாந்து மக்கள் கம்போடியா விசாவில் மட்டுமே இங்கு செல்ல முடியும்.

2008ம் ஜூலை 7ம் தேதியன்று, இந்த கோவில் உலக பாரம்பரிய தளமாக (UNESCO World Heritage Site) அறிவிக்கப்பட்டது.  

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.