நியமனம் செய்யப்பட்ட 2 வாரத்தில் பதவியை நிராகரித்த ஏர் இந்தியா சிஇஓ

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இலகர் அய்சி என்பவரை டாடா குழுமம் நியமனம் செய்தது. துருக்கியைச் சேர்ந்த இவர் அந்நாட்டின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், துருக்கி அதிபர் ஏர்டோகானின் முன்னாள் ஆலோசகரும் ஆவார்.

டாடா குழுமம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இலகர் அய்சியை நியமனம் செய்து அறிவித்தது. இவர் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சிஇஓ பொறுப்பு ஏற்க இருந்தார்.
ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் முக்கிய பொறுப்புகளில் இருப்பது பாதுகாப்பற்றது என்று நாடு தழுவி எதிர்ப்புகள் கிளம்பின.

இதற்கிடையே, ஆர்எஸ்எஸ் கீழ் இயங்கும் சுதேி ஜாக்ரன் மஞ்ச், அண்டை நாட்டவரை தலைமை பதவிக்கு நியமனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், இல்கர் அய்சி தனக்கு வழங்கப்பட்ட சிஇஓ பதவிக்கான நியமனத்தினை நிராகரித்து அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள்: ஐரோப்பிய யூனியனுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.