விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 22 வயது பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று இவர் விபத்தில் சிக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து அவர் கோமா நிலைக்கு சென்றார்.

உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் டாக்டர்கள் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் தவித்தனர்.

இருந்தாலும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இதில் அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை நலமாக இருக்கிறது. அந்த பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பி வருகிறது. அவர் பேசுவதற்கு கஷ்டப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.