புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 6,500 ஆக குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகதாரத்துறை கூறி உள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 2,373 பேருக்கு தொற்று உறுதியானது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 160 ஆக உயர்ந்தது.
தினசரி பாதிப்பு விகிதம் 0.74 சதவீதமாகவும், வாரந்திர பாதிப்பு விகிதம் 0.99 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.
கொரோனா பாதிப்பால் மேலும் 142 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 96 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,14,388 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 14,947 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 53 ஆயிரத்து 620 ஆக உயர்ந்தது.
தற்போது 77,152 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றுமுன்தினத்தை விட 8,528 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 21,83,976 டோஸ்களும், இதுவரை 178.02 கோடி தடுப்பூசி டோஸ்களும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி நேற்று 8,82,953 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 77 கோடியை கடந்துள்ளது.
இதையும் படியுங்கள்… கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் – ஐ.நா.பொதுச் சபையில் இந்தியா உறுதி