கே.ஜி.எப். 2 : மார்ச் 27ல் டிரைலர், ஏப்., 14ல் படம் ரிலீஸ்

கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ள கேஜிஎப் சாப்டர் -2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6 மணி 40 நிமிடத்திற்கு வெளியாக உள்ளதாகவும், ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் படம் வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த கேஜிஎப் சாப்டர்- 2 படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.