போலந்தில் இந்திய மாணவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இதுவரை உக்ரைனை விட்டு 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேறி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் மூலம் 3,000 மாணவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த, போலந்து நாட்டில் முகாமிட்டுள்ள மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் விகே சிங், கடந்த 3 நாட்களில் போலந்தில் இருந்து 7 விமானங்கள் மூலம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.
நாளை மேலும் 4 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். போலந்திற்கு வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்புடன் உள்ளதாகவும், வார்சா நகரில் 900 மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்குவதற்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சில மாணவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்க முடிவு செய்துள்ளதாகவும், எனினும் மத்திய அரசு சார்பில் மாணவர்கள் தங்கியிருக்க தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக ஹங்கேரியின் புடாபெஸ்டா நகரில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் சிறப்பு விமானம் மூலம் 219 மாணவர்கள் உள்பட இந்தியர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். 
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்திய மாணவர்களை வரவேற்றார். மேலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்திய மாணவர்களையும் வெளியேற்றுவதில் நாங்கள் வெற்றி பெற்று வருவதாக அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியர்களை அழைத்து வரும் பணியில் நான்கு மத்திய மந்திரிகள் மிக கடினமாக உழைக்கிறார்கள். இந்திய அழைத்து வரப்பட்ட அனைத்து மாணவர்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.