தமிழர் அல்லாதவர்கள் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டதே திராவிடம் – சீமான்

திராவிடம் என்பது தமிழர் அல்லாதவர்கள் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டது. அதுதான் திராவிடம் என சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ‘விழித்தெழு தமிழா’ அரசியல் கருத்தரங்கம் போரூர் அடுத்த மதனந்தபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமிழ் தேசிய தன்னுரிமை கட்சித் தலைவர் வியனரசு தலைமை தாங்கினார். இதையடுத்து பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
image
இதைத்தொடர்ந்து இறுதியாக  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது… டிஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார். தற்போது அவரே அதற்கு எதிராக போராடி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுக்கச் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். இதுவரை துப்பாக்கியால் சுட உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
திராவிடம் என்பது தமிழர் அல்லாதவர்கள் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டது. அதுதான் திராவிடம் என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.