எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய 59 இடங்களில் 11 கிலோ தங்கம், ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் அமைச்சராக இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 59 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், 11.153  கிலோ கிராம் தங்க நகைகள் மற்றும் கணக்கில் வராத ரூ.84 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதேபோல், எஸ்.பி.வேலுமணி பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் ரூ.34 லட்சம் முதலீடு செய்திருப்பதும் சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செல்போன்கள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்..
காங்கிரஸ் தலைமையை விமர்சித்த கபில் சிபல்: கண்டனம் தெரிவித்த தலைவர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.