பைக் திருடிய வாலிபர் கைது

கடலுார்: கடலுார் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில், புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். குண்டுசாலை ரோடு ஈமச்சடங்கு கட்டடம் அருகில் பைக்கில் சந்தேகும்படி வந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில், ஆலப்பாக்கம் அடுத்த கம்பளிமேட்டைச் சேர்ந்த சந்திரன் மகன் அன்பரசன், 24; என்பது தெரிந்தது. இவர், கடலுார் சாவடி, பச்சையாங்குப்பம், வடலுார் உள்ளிட்ட இடங்களில் 4 பைக், ஒரு மொபட் என 5 வாகனங்கள் திருடியதை ஒப்புக் கொண்டார். இவரை போலீசார் கைது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.