ஐ.சி.சி ஆல் ரவுண்டர் தரவரிசை – 2வது இடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்

துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 
இதில் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார். ரவிச்சந்திர அஸ்வின் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திர அஸ்வின் 2-வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 4-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.