ஷாபாஸ் ஷெரீப் "விரைவில்" பாகிஸ்தான் பிரதமராவார்: பிலாவல் பூட்டோ

 

பாகிஸ்தானில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் முக்கிய கூட்டணியான பாகிஸ்தான்  முட்டாடிடா குவாமி இயக்கம் (MQM-P) எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன்  உடன்பாடு ஒன்றை எட்டிய நிலையில் இம்ரான் கானிற்கு அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது. 

முன்னதாக,  இம்ரான் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் பெரும்பான்மையை இழந்த நிலையில்,  ட்வீட் செய்த PPP தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் MQM ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி,  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் “இப்போது பெரும்பான்மையை இழந்துவிட்டார்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் விரைவில் நாட்டின் பிரதமராகப் பதவியேற்பார் என்றும் கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பிலாவல் பூட்டோ, எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து, இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய ஆதரவளிக்க முடிவு செய்த முத்தஹிதா குவாமி இயக்கம்-பாகிஸ்தானுக்கு (MQM-P) நன்றி தெரிவித்தார். 

மேலும் படிக்க | இம்ரான்கானிற்கு வலுக்கும் சிக்கல், கீழவையில் இம்ரானில் அரசு பெரும்பான்மையை இழந்தது..!!

“இம்ரான் கான் இப்போது பெரும்பான்மையை இழந்துவிட்டார். அவர் இனி பிரதமர் அல்ல. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை நடைபெறுகிறது. நாளை வாக்கெடுப்பு நடத்தி இந்த விஷயத்திற்கு முடிவு கட்டுவோம். அதன்பிறகு நாம் வெளிப்படையான தேர்தல்களில் பணியாற்றத் தொடங்கலாம், ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான பயணத்தையும் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் நோக்கிய பயணத்தைத் தொடங்கலாம், ”என்று PPP தலைவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் “விரைவில்” நாட்டின் பிரதமராக வருவார் என்றும் பிலாவல் பூட்டோ கூறினார். “PPP மற்றும் MQM-P  இணைந்து செயல்படுவதற்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. கராச்சி மற்றும் பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு இரு கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமரை பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு ஷெபாஸ் ஷெரீப் சவால் விடுத்துள்ளதாக பிபிபி தலைவர் கூறினார். “அவருக்கு (இம்ரான் கான்) வேறு வழியில்லை. அவர் ராஜினாமா செய்யலாம் அல்லது நம்பிக்கை வக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யலாம்,” என்று பூட்டோ கூறினார்.

மேலும் படிக்க

 

 

| கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயலும் இம்ரான் கான்; தப்பிக்குமா இம்ரானின் நாற்காலி..!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.