நான் பொலிட்டிஷியன் இல்ல… ஐ எம் எ சோல்ஜர்… இணையத்தை நெறிக்கவிடும் பீஸ்ட் டிரெய்லர்

Beast Movie Trailer Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெறும் அரபிக்குத்து மற்றும், ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் அரபிக்குத்து பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடி தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகினறன்றனர்.

சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்த பாடல் யூடியூப் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து விஜய் குரலில் வெளியாக ஜாலியோ ஜிம்கான பாடலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்வதாக தகவல் வெளியானர்இ ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் படத்தின் டீசர் மற்றுமு் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று காத்திருந்தனர். அதற்கு பதில் சொல்லும் விதமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை என பதிவிட்டிருந்தார். இதனால் பீஸ்ட் படத்தின் அப்டேட் தான் நாளை வரப்போகிறது என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

அதன்படி ஏப்ரல் 2-ந்தேதி பீஸ்ட் படத்தில் டிரெய்லவர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் குஷியாக உள்ள நிலையில். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தாயாரிப்பு தரப்பில் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி வண்ணம் உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், டிரெய்லருக்காக வெயிட்டிங் என்று பலரும் கூறி இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஷாப்பிங் மால் உள்ளே புகுந்த தீவிரவாதிகள் அங்கு பலரையும் பனைய கைதியாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு மத்தியில் மாட்டிக்கொள்ளும் விஜய் தீவிரவாதிகளை எதிர்த்து மக்களை எப்படி காப்பாற்றினார் என்பதைதான் டிரெயலர் சொல்ல வருகிறது

வீரராகவன் என்ற கேரக்டரில் வரும் விஜய் ஸ்டைலிஷாக நடை உடை பாவனை என அனைத்திலும் வித்தியாசம் காட்டியுள்ளார். மேலும் அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. இதில் நான் அரசியல்வாதி இல்லை சோல்ஜர் என்று சொல்லும் டைலாக் இணையத்தை தெறிக்கவிடுகிறது. ஆனால் இந்த டிரெய்லரை பார்க்கும்போது ஹாலிட்டில் வெளியான டைஹார்டு படத்தை நினைவு படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.