பீஸ்ட் ட்ரைலரை பற்றி ப்ளூ சட்டை மாறனின் சர்ச்சையான கருத்து..விளாசும் ரசிகர்கள்..!

பீஸ்ட்
ட்ரைலர் வெளியான பின்பு ரசிகர்கள் அனைவரும் அதைப்பற்றியே தான் பேசிவருகின்றனர். என்னதான் ஐ.பி.எல் போட்டிகள் ஒறுபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் ரசிகர்கள் அதையும் மறந்து பீஸ்ட் ட்ரைலரில் மூழ்கியுள்ளனர்.

கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஓடும் பீஸ்ட் ட்ரைலர்
விஜய்
ரசிகர்களுக்கு செம விருந்தாக மாறியுள்ளது. பலமுறை பார்க்கத்தூண்டும் ட்ரைலரை உருவாக்கி அசத்தியுள்ளார்
நெல்சன்
என்பதே பொதுவான கருத்தாக இருந்து வருகின்றது. இருப்பினும் சிலர் ட்ரைலரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாமே நெல்சன்..!அதுக்குன்னு இப்படியா ?

படமே இன்னும் வெளியாகாத நிலையில் ட்ரைலரை மட்டும் பார்த்துவிட்டு இது அந்த படத்தின் காப்பி இந்த படத்தின் காப்பி என சிலர் கருத்து தெரிவிப்பது விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் தான் நெல்சனின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் ட்ரைலருக்கும் விமர்சனங்கள் எழுந்தது.

படம் ஆனால் வெளியான பின்பு சக்கைபோடு போட்டது. எனவே பீஸ்ட் படமும் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தகர்ந்தெறிந்து ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை பற்றி ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு சர்ச்சையை கிளப்புவதாக உள்ளது என ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

விஜய்

யூடியூபில் பல படங்களை விமர்சித்து பல வெறுப்புகளை சம்பாதித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் பீஸ்ட் ட்ரைலரை பார்த்துவிட்டு போட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகிவருகின்றது. பீஸ்ட் ட்ரைலரில் ஒரு காட்சியில் விஜய் காவி கலர் ஸ்க்ரீனை கிழிப்பார். இதை பல பேர் பல விதமாக பேசி வருகின்றனர்.

அதாவது விஜய் காவியை கிழிக்கின்றார் என சிலர் பேசிவருவது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனும் காவியை கிழிக்கும் விஜய், தில்லானா அரசியல் குறியீடு என ஒரு பதிவை போட்டுள்ளார்.

பீஸ்ட்

இது வழக்கம் போல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதார்த்தமாக வைக்கப்பட்ட காட்சியை ட்விஸ்ட் செய்து அதை அரசியல் ஆக்கிவிட்டார் என ப்ளூ சட்டை மாறனை விஜய் ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னது BEAST படம் முன்னாடியே ரிலீஸ் ஆகுதா?

அடுத்த செய்திகலர்ஸ் தமிழின் ஆர் யு ரெடி கேம் ஷோ குதூகல கொண்டாட்டதுடன் ஆரம்பம்….!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.