தங்கத்தின் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம்.?

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

 சென்னையில் நேற்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 176 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4803 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38424-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ஒரு கிராம் ரூ. 5202 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 41616 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.38,528- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,816- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.