நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படலாம்- சபையில் சபாநாயகர் அறிவிப்பு

இலங்கையில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பேசியதாவது:-

நாம் தோற்றுவிடுவோம் என்றால் அது பாராளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும்.

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் உள்ளதால் உடனடியாக நாம் ஆராய வேண்டி உள்ளன. இல்லையேல் ஆயிரம் உயிர்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளது.

“நமது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தில் இன்று இந்த விவாதம் நடத்தப்படுகிறது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன், இது மேலும் அதிகரிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்ததால், நான் இதை ஒரு நெருக்கடியின் ஆரம்பம் என்று குறிப்பிடுகிறேன்.

தற்போதைய எரிபொருள், எரிவாயு, மின்சாரத் தட்டுப்பாட்டைக் காட்டிலும் எதிர்காலத்தில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நாம் அனைவரும் வேலை செய்யும் விதத்தில் அது நடக்காது அல்லது ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.