வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் நகரம் மற்றும் புரூக்ளின் ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய சுரங்கபாதையில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாயினர்.
அமெரிக்காவின் , நியூயார்க் நகரில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. .அதே நேரம் புருக்ளின் நகரின் 4-வது அவென்யூ, 36 வது தெருவில் உள்ள மெட்ரோ ரயில்நிலையத்திற்கு செல்லும் சுரங்கபாதையில் நடந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு பொதுமக்கள் முதலுதவி சிகிச்சை செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![]() |
இரு வேறு இடங்களி்ல் நடந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்தாகவும் 5 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். புருக்ளின் மெட்ரோ ரயில்நிலைய பிளாட்பாரத்தில் மர்ம பொருளில் புகை கிளைம்பியதால், தீயணைப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு செயலழிக்க செய்யும் படையினரும் விரைந்துள்ளனர். இதனால் புருக்ளின் மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்படுகிறது.
Advertisement