உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது – பிரதமர் மோடி

உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் பார்ப்பதாகவும், அந்த நம்பிக்கைக்கு உயிரூட்ட புதிய உயரங்களை அடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தொடங்கி இதுவரை உள்ள அனைத்து பிரதமர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் டெல்லியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி பேதமோ அல்லது சித்தாந்த பேதமோ கருதாமல் அனைவரின் சேவைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர்கள் பின்பற்றிய செயல் திட்டங்களையும் அவர்களின் சிந்தனைகளையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
image
இந்நிலையில் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள பிரதமர்கள் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, நமது பிரதமர்கள் பெரும்பாலானோர்கள் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் எனக் கூறினார். சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் கூட, ஜனநாயக அமைப்பில் மிக உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அருங்காட்சியகம் அமைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.