தலித் சிறுவனை கால் பாதத்தை நக்க சொல்லி துன்புறுத்திய இளைஞர்கள்- தீயாய் பரவும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் ரெபரலியில் தலித் சிறுவனை, இளைஞன் ஒருவன் பாதத்தை நக்க சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 நிமிடம் 30 நொடிகள் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருக்கும் இளைஞன் ஒருவன் கீழே அமர்ந்திருக்கும் சிறுவனிடம் கால் பாதத்தை நீட்டி அதை நக்க சொல்கிறான். அவனை சுற்றியுள்ள அனைவரும் சிரிக்கின்றனர். இதனால் தரையில் அமர்ந்திருக்கும் சிறுவன் நடுங்குகிறான். அவர்கள் உயர்ஜாதி ஒன்றின் பெயரை கூறி அந்த சிறுவனை பயமுறுத்துகின்றனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்றதாகவும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் புகார் கொடுத்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் குறித்து வெளியான தகவலில் அந்த சிறுவன் 10-ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், தந்தையை இழந்து தாயுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் சிறுவனுடன் ஏதோ பணி ஒன்றை கொடுத்து, அவனுக்கு கூலி தராததால், சிறுவன் பணம் கேட்டதாகவும், அதனால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.