மாஸ்கோ: அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முற்றிலும் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களுடன் வரைவு அறிக்கையை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது முடிவு அவர்களின் கைகளில் உள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
பேச்சுவார்த்தையில் மெதுவாக முன்னேற்றம் ஏற்படுவதற்கு உக்ரைன் தான் காரணம். முன்னர் ஒப்பு கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து உக்ரைன் விலகி வருகிறது. பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த உக்ரைன் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மாஸ்கோ: அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷ்ய அதிபர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.